
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் உயர்த்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று அதிகாலை 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

