கந்தளாயில் எரிபொருள் பெற்றுகொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் குடிபோதையில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, பொலிஸார் ஒருவரை தாக்க முற்பட்ட சம்பவமொன்று கந்தளாயில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கந்தளாய் 91ம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் பெரும் திரளான பொதுமக்கள் எரிபொருளுக்காக காத்துக் கொண்டிருந்த வேளையில், சில இளைஞர்கள் அத்துமீறி முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளைக் கொண்டு எரிபொருள் பெருவதற்காக முயன்ற வேளையில் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து அவர்களை இனங்கண்டு தடுத்து நிறுத்த முற்பட்ட போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறுகள் ஏற்படுத்தியதோடு, பொலிஸார் ஒருவரையும் தாக்கியுள்ளனர்.

சில மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டதோடு, மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்ட வேளை, ரகளையில் ஈடுபட்டோர் தப்பிச் சென்றுள்ளார்கள்.
பின்புஎரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெற்றது.


பிற செய்திகள்

