பதில் கல்வி அமைச்சரை நியமித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பதில் கல்வி அமைச்சராக பந்துல குணவர்தன இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

பந்துல குணவர்தன போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக கடைமையாற்றி வருகின்றார்.

இதேவேளை, பந்துல குணவர்தன 2005 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்வி அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதால் பந்துல குணவர்தன பதில் கல்வி அமைச்சராக அரச தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவுடன் ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரான கலாநிதி சமன் வீரசிங்கவும் ரஷ்யா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply