நயனின் ‘நெற்றிக்கண்’ ட்ரெய்லர் வெளியானது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளதுடன், படம் ஓடிடியில் வெளியாகும் திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

த்ரில்லர் கதைக் களமாக உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாரா எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார்.

[embedded content]

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் நெற்றிக்கண் திரைப்பட ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் ஒரு விபத்தின் மூலமாக பார்வையற்றவராக மாறும் நயன்தாரா தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக் கருவாக இருப்பது தெரியவருகிறது.

அவள், படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ் இந்த ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கியுள்ளார்.

நெற்றிக்கண் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 13 டிஸ்னி ப்ளஸ் ஹொட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *