எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கும் ?

எதிர்காலத்தில் எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தெங்கு வளர்ப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கைக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டொன் எண்ணெய் தேவையாக உள்ளது.

ஆனால் உள்நாட்டு உற்பத்திகள் மூலம் அதனை நிரம்பல் செய்ய முடியாது.மேலும் அதேநேரம் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியையும் மேற்கொள்ள முடியாது.

அத்தோடு நாட்டில் டொலர் தட்டுப்பாடு நிலவுவதால் இறக்குமதி செய்வதில் சிக்கல் இருக்கிறது.எனவே எதிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *