இன்று இதுவரையில் 2,329 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 479 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,329 ஆக உயர்வடைந்துள்ளது.

Advertisement

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 304,161 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும்1,641 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 273,496 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *