நேற்றைய மக்கள் புரட்சிப் போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன.
காலி முகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்னும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்கும் வரை தாமும் தனது குழுவினரும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் பல பிரதேசங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிறசெய்திகள்