உலகில், நீரில் மூழ்கி இறப்பவர்களில் இலங்கை 23 ஆவது இடத்தில் இடம்பெற்றிருப்பதாக இலங்கை உயிர் காக்கும் சங்கத்தின் பிரதித் தலைவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச். சூலசூரிய தெரிவித்தார்.
உலக நீரில் மூழ்கும் தடுப்பு தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வருடந்தோரும் சுமார் 10 ஆயிரம் பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். அத்துடன் நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் இருவராவது உயிரிழக்கின்றனர். அவர்களில் 98 வீதமானோர் அலட்சியமாகக் நீரில் மூழ்கி விடுகின்றனர்.
இவ்வாறு உயிரிழப்பவர்களின் அதிகமானோர் 20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். நாட்டில் இவ்வாறான விலைமதிப்பற்ற மனித உயிர்களின் அகால மரணத்தினால், அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய விடயங்களையும் கொண்டுள்ளவர்களையும் நாடு இழக்க நேரிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.