தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

இந்த மாதம் உலக தின உணவு தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்றையதினம் யாழ் ஊடக மையத்தில் உலக உணவு ஆதிக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்..

இந்த மாதம் இறுதிவரைக்கும் தொடரும் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.அந்த வகையில நாங்கள் உணவு ஆதிக்கத்தை பெற்று இருக்கின்றோமா இல்லை பெறவில்லையா என கேட்டால் பெறவில்லை என்றே கூற வேண்டும்.

அவ்வாறாக நாங்கள் பயிரிட்டு வந்த நெல்லாகவோ பயிராகவோ அல்லது தானியவகை பேன்றன எமது கையை விட்டு சென்று விட்டது.இப்போது நாங்கள் பல்தேசியக்கம்பெனிகளாலே அறிமுகப்படுத்தும் அவர்களுடைய மரபனு நீக்கப்பபட்ட விதைகளைத் தான் நாங்கள் பயிரிட்டு வருகின்றோம். இந்த மரபனு நீக்கப்பட்ட விதைகளோ விதை தானியங்களோ நெல் தானியங்களோ எங்களுடை ஆரோக்கியத்திற்கு அப்பாற்பட்ட விடயமாக அத்தோடு எங்களுடைய ஆரோக்கியத்தை பாதிப்படைச் செய்கின்றது.

தற்பொழுது வடபகுதி மீனவ சமூகம் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.அத்தோடு சொந்த இடத்தை விட்டு பிரிந்து இன்னமும் முகாம்களில் வசித்து வருகின்ற விவசாயிகள் தமது உணவு தன்னாதிக்கதை்தை இழந்து முப்பது வருடங்கள் ஆகின்றது.அவர்கள் தங்களுடைய உணவு ஆதிக்கத்தை அடைய வேண்டுமானால் அவர்களுக்குரிய சொந்த நிலம் வழங்கப்படவேண்டும்.

இன்று வரை 3918 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட வேண்டிய நிலை சூழ்நிலையிலும் 7000குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட வேண்டிய நிலையில் வலிகழக்கு மக்கள் இருக்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் நாம் எவ்வாறு உணவு தன்னாதிக்கத்தை அடந்து இருப்போம் என கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதேவேளை நாங்கள் வீட்டுத்தோட்டம் கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.கடந்த முப்பது வருடமாக இடம்பெயர்ந்து முகாம்களில் இருப்பதால் வீட்டுத்தோட்டம் கூட செய்ய முடியவில்லை.

ஆரோக்கியமான மரக்கறிகளை வாங்க முடியவில்லை. அதற்கு காரணம் நச்சுத்தன்மையான உரத்தை பயன்படுத்துகிறார்கள்.பண்டைய கால மரக்கறி விதைகளை வாங்கி விவசாயம் மேற்கொண்டால் அதற்கு சரியான தீர்வு கிடைக்கும் .

உணவு தன்னாதிக்கத்தில் கடலுணவு கிடைக்கப்பெறவில்லை .அது ஏன் என்றால் இந்திய இழுவைப்படகே காரணம். வடபகுதி கடலை நம்பி வாழும் மக்களின் தொழில் அழிக்கப்படுகின்றது.இதனால் முற்றுமுழுதாக கடலுணவு கிடைக்காமல் போகின்றது.

அத்தோடு கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக வழங்கும் திட்டம்.அதுவும் இணையவழி மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.அதில் பெரும் பாதிப்பு காணப்படுகின்றது.கடல் நீரை வெளியே எடுத்து சுத்திகரித்தால் அதில் 35வீதம் மட்டுமே நன்னீராக வரும் மிகுதி வந்து அதிக உப்பு கடலுக்குள் தான் செல்லும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மெற்றிக்தொன் நீருப்பு சுத்திகரிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.ஆனால் அது சுத்திகரிக்கப்பட்டால் 65000மெற்றிக்தொன் நீர் உப்பு செறிவு கூடி கடலுக்குள்ளே சென்று விடும்.இது கலப்பதால் உப்பின் செறிவு கூடும்.இதனால் கரைவெளியில் நம்பி வாழும் மீனவர்களின் சிறு தொழில் பாதிப்படையும்.என மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *