அடிப்படை கட்டமைப்பு விவகாரத்திலும் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன – மோடி

அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கதிசக்தி திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ’25 ஆண்டுகால வளர்ச்சிக்கு இப்போது அடித்தளம் இடப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள உள் கட்டமைப்பின் பொருள், பெரும்பாலான அரசியல் கட்சிகளின் முன்னுரிமையில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.

இப்போது சில அரசியல் கட்சிகள் நாட்டுக்கு தேவையான கடமானத்தை விமர்சிக்கத் தொடங்கும் சூழ்நிலை வந்துவிட்டது.

வளர்ச்சிப் பணிகளில் தாமதம் மற்றும் மந்தமான அணுகுமுறை காரணமாக வரி செலுத்துவோரின் பணம் கடந்த காலத்தில் அவமதிக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *