நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு!

நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவத்தோடு தொடர்படைய மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த மர்ப நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், கைது செய்யப்பட்ட மர்ம நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *