தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்கொரியாவில் மூன்று இலட்சத்து இரண்டாயிரத்து 66பேர் மீண்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 76ஆவது நாடாக விளங்கும் தென்கொரியாவில் இதுவரை மூன்று இலட்சத்து 35ஆயிரத்து 742பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து 605பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 584பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 31ஆயிரத்து 071பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *