யாழில் 19 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்குக் கொரோனோ!

யாழ்.மாவட்டத்தில் 19 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 147 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, யாழ்.மாவட்டத்தில் 5 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சியில் பிறந்து 4 மாதங்களேயான சிசுவுக்கும், முல்லைத்தீவில் ஒருவருக்கும், வவுனியாவில் 2 பேருக்கும், மன்னாரில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *