8 கொள்கலன் பால்மா விடுவிப்பு!

நுகர்வோர் வார இறுதியில் தட்டுப்பாடின்றி பால்மாவை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என பால்மா வர்த்தகர்கள் சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

மேலும், 8,000 தொன் பால் மாவுக்கான தட்டுப்பாடு தற்போது சந்தையில் நிலவுவதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட தினங்களில் ஒரே தடவையில் பெருமளவு பால்மாவை சந்தைக்கு விநியோகிக்க முடியாதுள்ளது.

எவ்வாறாயினும், மேலும் 8 கொள்கலன் பால்மா விடுவிக்கப்படுவதற்காக துறைமுகத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பால் மாவை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டமையுடன் சில வர்த்தக நிலையங்களில் உள்ளூர் தயாரிப்பு பால்மா ஒருபக்கற் வீதம் மக்களுக்கு வழங்கப்பட்டதையும் காண முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *