முல்லைத்தீவு, கரைத்துறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட செம்மலைப் பகுதியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய சிறீசங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
செம்மலைப் பகுதியில் நீர்நிலை ஒன்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


