கனடா தூதுவர் டேவிட் மக்னன் இன்று கிளிநொச்சிக்கு விஜயம்

கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்ட கனடா தூதுவர் டேவிட் மக்னன், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட கனடா தூதுவர், யாழ் மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட பலருடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

இன்றைய தினம் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுடன், சமகால அரசியல் நிலவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடலில் கனடா தூதுவர் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *