கிளிநொச்சியில் இராணுவ வாகனம் பாரவூர்தியுடன் மோதி விபத்து!

கிளிநொச்சி, கொக்காவில் பகுதியில் இராணுவ வாகனமொன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது

கப்பல் ஒன்றை இழுத்துச் சென்ற இராணுவ வாகனமும், சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகி வீதியை விட்டு விலகியுள்ளன.

விபத்தில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *