இந்திய இராணுவ பிரதானிக்கும் பாதுகாப்பு செயலாளருக்குமிடையில் சந்திப்பு!

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தலைமையிலான இராணுவ உயர் தூதுக்குழுவிற்கும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கை குறித்து சினேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய இராணுவ பிரதானி ஆகியோரின் இந்தச் சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *