எந்தவொரு தொலைபேசி பாவனையாளரும் தான் பயன்டுத்தும் வலையமைப்பில் இருந்து வேறு ஒரு தொலைபேசி வலையமைப்பிற்கு தங்களது இலக்கத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இச் சேவைக்கு சட்ட அனுமதி கிடைத்திருப்பதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க டுவிட்டரில் பதிவு தெரிவித்துள்ளார்.


