உறவுக்கார இளைஞன் ஒருவரால், எட்டு வயது சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமொன்று பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில், அதனைத் திருத்துவதற்காக வீட்டுக்கு வரவழைக்கப்பட்ட உறவுக்கார இளைஞனே, அவ்வீட்டிலிருந்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுமியின் வீட்டில் சமையலறையுடன் மற்றுமோர் அறை மட்டுமே உள்ளது.
அவ்வீட்டுக்கு தற்காலிக இணைப்பின் ஊடாக மின்சாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், கடந்த 12ஆம் திகதி இரவு திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அதனை திருத்துவதற்காக குறித்த இளைஞனை வீட்டுக்கு அழைத்துள்ள சிறுமியின் தாய், குப்பி இலாம்பை பற்றவைப்பதற்கான ஏற்பாடுகளை சமையலறையில் வைத்து மேற்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், அறையின் கட்டலில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை, அவ்விளைஞன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது, பாதிக்கப்பட்ட எட்டுவயதான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில், நேற்று (13) கைது செய்யப்பட்ட 19 வயதான இளைஞனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


