ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றில் நடைபெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது, தலா இரண்டு 50 இலட்சம் ரூபாய் பிணைகளில் அவரை விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சுமார் ஆறு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *