மாவடிப்பள்ளி பிரதான வீதியில் வடி ரக வாகனம் விபத்து ! ஒருவர் காயம்

 

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த வடி ரக வாகனம் பாலத்தில் மோதுண்டு பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *