சிறந்த ஆசிரியர் 2021 ஆண்டிற்கான விருது, இரும்புப் பெண் பார்வதி மாசிலாமணி ஆசிரியைருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு ஏ. ஆர். மன்சூர் பவுண்டேஷனின் ஏற்பாட்டில், சிறந்த ஆசிரியரை தேர்வு செய்யும் “My favourite teacher” எனும் போட்டி ஒவ்வொரு வருடமும் இடம்பெறுகின்றது.
இந்த நிலையில், சிறந்த ஆசிரியர் 2021 விருது கல்முனை, இரும்புப் பெண் பார்வதி மாசிலாமணி ஆசிரியைக்கு வழங்கப்பட்டது.
கல்முனையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, ஏ. ஆர். மன்சூர் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், அவுஸ்திரேலிய முஸ்லிம் பெண்கள் கவுண்சிலின் செயலாளருமான சட்டத்தரணி மர்யம் நளீமுதீன் தலைமை தாங்கியுள்ளார்.
பிரதம அதிதியாக இவ்விழாவில் கலந்துகொண்ட, முன்னாள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாம், பல மாணவர்களினால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியை பார்வதி மாசிலாமணிக்கு
மர்ஹும் ஏ .ஆர். மன்சூர் ஞாபகார்த்த விருது மற்றும் 25,000 ரூபா பணப்பரிசிலையும் வழங்கி வைத்தார்.
மேலும்,
பார்வதி மாசிலாமணி ஆசிரியை 1964 ஆம் ஆண்டு நிந்தவூர் பிரதேசத்தில் பிறந்தவராவார்.
தமிழ் மொழியும் இலக்கியம், இந்து சமயம் மற்றும் தமிழ் இலக்கிய நயம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்ற இவர், இலங்கை ஆசிரியர் சேவை தரம் ஒன்றைப் பூர்த்தி செய்திருக்கின்றார்.
1990 தொடக்கம் 1991 வரை கமு/அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலத்திலும் 1991 தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையிலும் 2017 தொடக்கம் 2021 வரை அக்கறைப்பற்று ராமகிருஷ்ணா தேசிய பாடசாலையிலும் கடமையாற்றியுள்ளார்.
தற்போது கார்மல் பாத்திமா தேசிய பாடசாலை அடங்களாக 31 வருடங்கள்
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அர்ப்பணிப்புடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக சேவையாற்றி கொண்டிருக்கும் இவர், தன் அன்பாலும் அரவணைப்பினாலும் பல மாணவர்களின் உள்ளங்களில் இன்றும் குடி கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த விருதே சான்றாகும்.


