நோர்வே வில்- அம்பு தாக்குதல்: சந்தேக நபர் பொலிஸாருக்கு நன்கு அறியப்பட்டவர்!

நோர்வேயில் நடந்த கொடிய வில் மற்றும் அம்பு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர் இஸ்லாமியராக மாறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவரிடம் இஸ்லாமிய தீவிரமயமாக்கலின் அறிகுறிகள் தென்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், அவர் மீது பொலிஸார் முன்னதாக சந்தேகம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

37 வயதான டேனிஷ் குடிமகனான அவர், காங்ஸ்பெர்க்கில் நேற்று (புதன்கிழமை) இரவு நான்கு பெண்களையும் ஒரு ஆணையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

68 கிலோமீட்டர் தெற்கே நோர்வேயின் காங்ஸ்பெர்க்கின் பல்வேறு பகுதிகளில் இந்த தாக்குதல் நடந்தது

பிராந்திய பொலிஸ்துறைத் தலைவர் ஓலே பிரெட்ரூப் சவெருட் இதுகுறித்து கூறுகையில், ‘அதிகாரிகள் கடைசியாக அந்த மனிதருடன் 2020இல் தொடர்பு கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள். அவர் கைது செய்யப்பட்டு ஒரே இரவில் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார்’ என கூறினார்.

Leave a Reply