நாகர் கோயில் களப்பு பகுதியிலும் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

யாழ் குடாநாட்டின் நாகர்கோயில் களப்பு பகுதி நீரேரிகளில் ஒரு தொகுதி மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

பருவகால கடலுயிரின வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த கருத்திட்டத்திற்கு அமைய வடபகுதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நன்னீர்  நிலைகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வருகின்றன.

நாடளாவிய ரீதியில் மீன் வளர்ப்புக்கு ஏதவான வளமான நன்னீர் நிலையங்கள் அனைத்திலும் மீன் குஞ்சுகளை வளரச்செய்வதன் ஊடாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தமது பொருளாதாரத் உயர்த்திக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்த முடியுமென்ற தூரநோக்கு திட்டத்திற்கு அமைவாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிலையான நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டு பல இலட்சம் மீ{ன் குஞ்சுகள் விடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக யாழ். குடாநாட்டின் நாகர்கோயில் களப்பு பகுதியில் இன்றையதினம் ஒருதொகுதி மீன் குஞ்சகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக பொறுப்பாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தலைமையில் விடப்பட்டன.

குறித்த மீன்குஞ்சுகள் சுமார் 3 முதல் 4 மாதங்களில் அறுவடை செய்யக் கூடிய வகையில் இருக்கும் என்றும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போது நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக வறுமையை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்க தரிசனமான குறித்த கருத்திட்டம் பேருதவியாகவும், வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்ததுடன் தற்போதும் அவ்வாறான அவரது முயற்சிகள் தமக்கு பொருளாதாரத்தை பெற்றுத்தரும் என்றும் தெரிவித்த குறித்த பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *