கால்வாயில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மொறவக்க, பரணவத்த பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், பணிக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply