மின்மாற்றி தீப்பற்றி எரிந்ததால் தடைப்பட்டது மின்சாரம்-வட்டுக்கோட்டையில் சம்பவம்..!

வலி. மேற்கு பிரதேச சபையின் வட்டுக்கோட்டை உப அலுவலகத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிதுநேரம் மின்சாரம் தடைப்பட்டது.

மேலும் இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

எனினும் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த மின்சார சபையினர் குறித்த தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

மின்மாற்றியில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் மின்மாற்றி சுமார் அரைமணி நேரம் தீப்பற்றி எரிந்ததாக அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி..!

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! என்ன நடந்துச்சு தெரியுமா?

Leave a Reply