அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் இரண்டு கைதிகளை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தாக்குதல் நடத்திய சிறை அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை என்று நாட்டின் முன்னணி கைதிகள் அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
அத்தோடு அங்குனகொலபெலஸ்ஸ பிரதேச சபை உறுப்பினரான அமில குமாரசிங்க மற்றும் துலாந்த ராஜபக்ச ஆகியோரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துலாந்த ராஜபக்ச சிறைச்சாலையில் மனிதாபிமானமற்ற தாக்குதலை அடுத்து தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது தலையில் உட்புற இரத்தப்போக்கு காணப்படுவதாகவும் பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.