யாழில் இ.போ.ச. பஸ்ஸை வழிமறித்து சாரதி,நடத்துனர், பயணி மீது தாக்குதல்..!

யாழ். தென்மராட்சி,சாவகச்சேரி தபால் கந்தோர் வீதி ஊடாகப் பயணித்த இ.போ.ச. பஸ் ஒன்றை வழிமறித்த இருவர் சாரதி, நடத்துநர் மற்றும் பயணி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.சாவகச்சேரி- சுன்னாகம் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட பஸ்ஸில் கெருடாவில் பகுதியில் ஏறிய நபரை குறி வைத்து இருவர் பஸ்ஸை மறித்து குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த சாரமதி மற்றும் பொலிஸாருக்குத் தகவல் வழங்க முற்பட்ட நடத்துனர் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் வட்டுக்கோட்டைபகுதியைச் சேர்ந்த பயணி ஆகியோர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகக் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகிின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *