யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நேற்று மாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அண்மையிலேயே வெளிநாட்டில் நாடு திரும்பிய, சாவகச்சேரியைச் சேர்ந்த 24 வயதுடைய நிரோஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சாவகச்சேரியின் மடத்தடிப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயம் அடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அவரின் மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவியவருகின்றது.





