சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தெளிவான தீர்மானமொன்றை அரசாங்கம், எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
“அவ்வாறு தீர்வு வழங்காவிடின் தங்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்’ என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலை ஆரம்பிக்கும் செயற்பாடு தொடர்பில், அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





