கிளிநொச்சி டிப்போ சந்தியில் ரிப்பர் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவளவில் இடம்பெற்றது.
வவுனியா திசையிலிருந்து ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஏ9 வீதியில் கிரவல் ஏற்றி பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திற்கு சென்று விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில், எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





