வடமராட்சி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறையால் மீனவர்கள் குறித்த அறிக்கை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.





