கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வெற்றிகரமான நிலை! – கெஹெலிய

நாட்டில் கொரோனாத் தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

யுனிசெப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் உடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

இதற்கு சர்வதேச அளவிலும் சிறந்த ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சூழ்நிலையில், சில வளர்ந்த நாடுகள் சிரேஷ்ட குடிமக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்ட நிலையில், இந்நாட்டு சிரேஷ்ட மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *