கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்கன்கட்டு பகுதியில் இராணுவ பயன்பாட்டு பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது
கிளிநொச்சி – கோரக்கன்கட்டு பகுதியில் இராணுவ பயன்பாட்டு பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த மழை காரணமாக, மண்ணில் புதைந்திருந்த குறித்த பொருட்கள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அவதானித்த பிரதேசவாசிகள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த பொருட்கள் இராணுவ உபயோக பொருட்கள் எனவும், அதில் 7 கண்ணிவெடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பில் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, பின்னர் பாதுகாப்பான முறையில் அகற்றப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.





