அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பொம்மையாக மாறிவிட்டது எனவும், மீனவ சமூகத்தின் உரிமைகளை வெளிநாட்டு டொலர் தரகர்களிடம் ஒப்படைத்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.
அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தை அண்டியுள்ள மீனவர் சமூகத்தை எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தால் மீனவர் சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பொம்மையாக மாறிவிட்டது. நாட்டில் உள்ள மீனவ சமூகத்தின் உரிமைகளை வெளிநாட்டு டொலர் தரகர்களிடம் ஒப்படைத்துள்ளது.
நாட்டின் மீன்பிடித் தொழிலில் புரட்சிகர மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மீனவர்கள் தமது பிரச்சினைகளைக் கூறி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.





