மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ். சுண்டிக்குளி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில், சண்டிலிப்பாயில் இருந்து தொட்டிலடி நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாது.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் காயமடைந்ததால், யாழ். போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





