தீயில் எரிந்து பெண் உயிரிழப்பு- சந்தேகத்தில் கணவன் கைது

வவுனியாவில் பெண் ஒருவர் தீ விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, கற்பகபுரம், நான்காம் ஒழுங்கை பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிலிருந்து புகை வெளிவந்தததைத் தொடர்ந்து அயலவர்கள் அங்கு சென்று பார்வையிட்டபோது, வீட்டின் அறை ஒன்றில் குறித்த பெண் தீயில் எரிந்து கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து அயலவர்கள் கதவை உடைத்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டபோதிலிலும், அந்தப் பெண் முற்றாகத் தீயில் எரிந்து மரணமானார்.

இந்தச் சம்பவத்தின்போது அவரின் மகனான சிறுவன் மலசலகூடத்துக்குள் வைத்து வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை செய்த பூவரசன் குளம் பொலிஸார், தற்போது குறித்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணவர் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணி புரிவதாகவும், மனைவிக்கும் அவருக்கும் இடையில் கடந்த பல மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாவும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *