நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை அடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், பாடசாலைகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு யாரேனும் அச்சுறுத்தல் விடுத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிரியர், அதிபர்கள் சம்பள பிரச்சினைகளால் பல ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கின்றனர்.
எனினும், பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்னர் அவர்கள் பாடசாலைக்கு வந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை அரசு நியாயமான தீர்வை வழங்கியுள்ளதாகவும், பாடசாலைகள் திறந்த பின்னர் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





