ஆசிரியர், அதிபர் சம்பளத்தை தீர்க்கும் பணியில் முருத்தட்டுவே தேரர் ஈடுபடுவது அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாகவே தேரர் ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல் செயற்படுகிறார்.
இது அரசாங்கத்துடன் தேரர் இணைந்து செய்யும் சூழ்ச்சி.
இத்தகைய சூழ்ச்சிகளுக்கு ஆசிரியர் தொழிற்சங்கம் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்காக, ஆசிரியர்களே பேசாத போது முருத்தட்டுவே தேரர் இது தொடர்பில் பேசுவது ஏன், தங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விடயதிற்காக மூக்கை நுழைக்கும் தேரர் ஏன் செவிலியர்களின் போராட்டத்திற்கு குரல் கொடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.





