பண்டோரா பத்திரிகையில் வெளிப்படுத்தப்பட்ட நிரூபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவன் நடேசனின் மறைக்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக தனக்கு தெரிந்த தகவல்களை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க, இவ்விடயத்தை தனது வழக்கறிஞர் மூலம் லஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பண்டோரா பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தொடர்பாக லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளுக்கு உதவும் வகையில் தன்னிடம் உள்ள ஆதாரங்களை ராமநாயக்க வழங்கத் தயாராக உள்ளதாக வழக்கறிஞர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





