தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர், எங்கள் மக்கள் சக்தி கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளார்.
அக்கட்சியின் அரசியல் உறுப்பினர்கள் மற்றும் மத்திய குழு சபை கூட்டாக இணைந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அத்துரலியே ரத்ன தேரர் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதன் காரணமாகவே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், இந்த முடிவை தேர்தல் ஆணையம் மூலம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரத்ன தேரரை தமது கட்சியில் இருந்து நீக்குவதோடு மட்டுமல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறும் தேர்தல் ஆணையத்திடம் எங்கள் மக்கள் சக்தி கட்சி கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





