அமெரிக்கா தமது செல்வாக்கை ஏற்படுத்திக்கொள்ள செய்யப்பட்டதே கெரவலப்பிட்டிய ஒப்பந்தம்!

இலங்கை, கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் 40 வீத பங்குகளை வழங்குவது தொடர்பாக, அமெரிக்க நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவிற்கு சொந்தமான நிலையான கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த வாய்ப்பு கிடைக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், இது மின் நிலைய பங்யை வழங்கியதை விட மிகவும் ஆபத்தானது. இது இலங்கையில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய பிராந்தியத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்திய துணைக்கண்டத்தில் காலூன்றுவதற்கு அமெரிக்கா கடுமையாக முயற்சித்து வருகின்றது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அந்த வாய்ப்பை நமது அரசாங்கம் இலகுவாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *