கிளிநொச்சியில் விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமையுடன், மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையில் இருந்து மாவட்ட செயலகம் வரை சென்று இப் பேரணி நிறைவடைந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான மகஜர் கையளிக்கப்பட்டது. மேற்படி, மகஜர்களை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் பெற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த போராட்டத்தின்போது சேதனப் பசளை உரிய தரத்தில் கிடைப்பதில்லை. மாவட்டத்தில் தேவையான 40 விதமான நிலம் பயிர் செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


