புதையல் தோண்டிய நால்வர் கைது!

பதுளை எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம, பல்லபொடுவ மற்றும் தெமோதர பகுதியைச் சேரந்;த 45, 51, 53 மற்றும் 54 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூசைப்பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களை பண்டாரவெல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *