அரசாங்கத்தின் அலட்சியத்தால் நெற்பயிர்ச் செய்கையில் இருந்து விலகிய விவசாயிகள்!

ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹெர பகுதியில் உள்ள விவசாய மக்கள், பெரும்போக நெல் விவசாயத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

சுமார் 950 ஏக்கர் வயல் நிலங்களில் இருந்து 400 விவசாயிகள், நெல் விளைச்சலுக்கு தேவையான பசளை இல்லாமல் பயிர்கள் யாவும் சேதமைடைந்துள்ள நிலையில், இனியும் அரசாங்கத்தை நம்ப முடியாதென கூறி விலகியுள்ளதாக லுனுகம்வெஹெர விவசாயிகள் சங்க செயலாளர் எஸ்.ஏ.எஸ்.வீரவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த கூட்டத்தில் ஒரு விவசாய ஆராய்ச்சி அலுவலர் மட்டுமே இருந்ததால் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவின்படி இரசாயன உரங்கள் மற்றும் விவசாய சலுகை பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக , இரண்டு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 400 விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று விலக முடிவு செய்துள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *