வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் பசும்பாலை கொள்வனவு செய்வதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்து நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மைய சில மாதங்களாக பால் பாக்கெட்டுகளில் விலைகள் அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பசுப்பாலின் கொள்வனவு செய்வதில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பசுப்பாலை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது.
உடுப்பிட்டி சந்திப் பகுதியில் அமைந்துள்ள கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்திலேயே இவ்வாறு பாலினை கொள்வனவு செய்வதற்காக மக்கள் முண்டியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.


