வசந்த கரன்னாகொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்!

கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தை மீளப்பெறுவதற்கு சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேரணை மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்டது.

குறித்த வழக்கு சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

இந்த மனுவின் பிரவாதிகளான சட்டமா அதிபர் மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோரை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் இதன்போது அறிவித்தல் விடுத்துள்ளது.

காணாமல்ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் நால்வரால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *