கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், தொற்றுக்கு இலக்காகும் நோயாளிகள் தற்போது கண்டறியப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவ்விடங்களைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

இதன்போது, கொரோனா ஒழிப்புக்காக சுகாதாரத் தரப்பினர் பின்பற்றிய வீட்டுத் தனிமைப்படுத்தல் வேலைத்திட்டம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட பாராட்டைப் பெற்றுள்ளது என விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *