அனுமதிப்பத்திரத்தில் திகதியை மாற்றி மோசடி: ஒருவர் கைது!

மிருசுவில் பகுதியில் மண்ணுடன் வந்த டிப்பர் ஒன்றையும் அதன் சாரதியையும் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மணல் அனுமதிப்பத்திரத்தில் திகதியை மாற்றி மோசடி செய்து மணலை ஏற்றிச் செல்லும்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி மணல் டிப்பருடன் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *